mZF Kiw
முதல் படி: ஒரு பெண் கர்பமாகி ஐந்து மாதத்திலிருந்தே கர்பவதிக்குள் வளர்ந்து வரும் கருவிற்கு இசையின் இன்பஅதிர்ச்சியைக் கொடுத்து தாய்க்கும் சேய்க்கும் நல்லது விளைவிக்கும் விஞ்ஞான ரீதியான, த்யான வழியான, அவர் அவர்களுக்கு உகந்த, ஆத்ம ஸங்கீதத்தை அளவோடு அளிப்பது. இதுவே இசைப் பரம்பரையை உண்டாக்கும் முதல் படி.
இரண்டாவது படி: குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை தாய்க்கு இசையில் நாட்டம் உண்டாகும்படியான, அடிப்படை விஷயங்களை அளிப்பது, சேய்க்கு, தாயே இசையைக்கு வித்திடும்படியான உத்திகளக் கொடுத்து ஆரோக்யப்படுத்துவது. இம்முறையால் குழந்தைக்கு ஒலிகள் மூலம் நிறைய விடயங்களை தன்னிச்சைப்படி அவர்களாகவே கண்டுபிடிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்துவது. இந்த இசைச்சூழ் நிலையினால், தாக்கத்தினால் தாய் மொழியிலிருந்து பல மொழிகளை சிறுவயதிலே சிறப்பாக அறிமுகப்படுத்தும் வழிகளைக் கண்டாராய்வது. உலகம் சுருங்கும் இக்கால கட்டத்தில் உணர்சிகளுக்கு உயிரூட்டும் மொழிகள் மறையாமல், ஒருவருக்கொருவர் பரமாரிக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் மதிக்கவும், கலாசாரங்களை மதிக்கவும் உணற்சி பூர்வமாக போடும் அடித்தளம் இந்த இரண்டாம்படி.
மூன்றாவது படி: மூன்று வயதிலிருந்து ஏழு வயதிற்குள் குழந்தைகளுக்கு இசை மூலம் நிறைய விடயங்களை அள்ளித் தரலாம். வெவ்வேறு ஒலிகளைக்கேட்டு நம்மைச் சுற்றியுள்ள சூழ் நிலை, இயற்கையின் அற்புத ஒலிகள், ஒலிகளின் ஸ்வரூபங்கள், ஆனந்த நடனத்தின் ஜதிகள், மொழிகளின் அற்புத ஸங்கீதம், கணக்கும் சங்கீதமும், மற்றும் பலப்பல விடயங்களை சுலபமாக அவரவர்கள் இயற்கைக்குத் தகுந்த மாதிரி குழந்தைகளை மகிழ்ச்சியாகக் க்ற்றுக்கொடுக்கலாம், நாமும் மறுபடியும் நமக்குத் தெரியாத விடயங்கள் பலவற்றை அவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஸங்கீதத்தின் பல நுணுக்கங்களை சுலபமாகக் கற்பிக்கலாம், காதால் கேட்டு மட்டும் இல்லை. கண்ணால் பார்த்தும் கூட.
நான்காவது படி: ஏழு வயதிலிருந்து இசையை முறையாகக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம். அவசரப்படாமல், இங்கிருந்து ஒவ்வொரு படியாக முன்னேறலாம். இசையில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகள் அவர்களே தன்னுடைய வேகத்தை நிர்ணயிக்கும்படி செய்து, ஊக்குவிக்கலாம். இதற்கு வேண்டிய வழிமுறைகள் அத்தனையும் கொண்டது, யோகா, குரல் வளர்ப்பயிற்சிகளும் COMET இசைப் பயிற்சிகளுக்குள் அடக்கம்.
இவ்வழியில் வளர்ந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பு முடிக்கும் தருவாயில் இசையிலும், இசையை ஒட்டிய, நாட்டிய, நாடகக்கலை மற்றும் எந்தக்கலையிலும் நல்ல முன்னணியில் இருப்பார்கள் என்பது அனுபவ பூர்வமாக பிருஹத்வனியில் ஆராய்ச்சியின் அடிப்படையில் வெளிவந்த உண்மைகள். மேற்படிப்பிலும் இக்கலையின் ஆக்கபூர்வமான தாக்கம் மிக நேர்த்தியாக நிறையக் காண்கிறோம்.