top of page

fhnkl;

இசையாராய்ச்சியின் அடிப்படை நோக்கம் என்ன?

இசை எல்லோருக்கும் சொந்தம். எல்லோருக்கும் இதை எளிமையாகப் புரியும்படியான உத்திகளோடு, தெளிவாகவும், நேர்த்தியாகவும், இளம் வயதிலிருந்தே கசடறக் கற்பித்தால் ஒவ்வொருவருக்கும் புத்தி கூர்மை, தெளிந்த நோக்கு, உணர்வுகள், தனக்கென்று திறக்கும் ஒரு மன வெளி, கற்பனைத் திறன், அழகுணர்ச்சி, தனக்குள் புதைந்திருக்கும் சக்தி வெளிப்பாடு, தம் வாழ் நாள் முழுதிலும் தனக்குள் ஆனந்தத்தை அனுபவிக்கும் அற்புதமானதொரு நல்ல ஆரோக்யமான மன-உடல் இணைப்புப் பயிற்சி-இவைகள் அத்தனையும் எளிதாக அடையலாம்.

 

இவைகளைப் படிப்படியாக ஆராய்ச்சியின் அடிப்படையில் இளம் சமுதாயத்தினற்குக் கொண்டு படைத்தால் அவர்கள் நல்லதோர் சமுதாயத்தைப்பெருக்குவார்கள் என்ற எண்ணங்களே இந்த அமைப்பின் அடிப்படை. இதற்கான அடித்தளம் டாக்டர் காரைக்குடி சுப்பிரமணியன் அவர்களின் பலவிதமான இசை ஆராய்ச்சிகளே. உன்னதமான வீணை இசைக்கலஞராக, படைப்பாளராக, ஆராய்ச்சியாளராக, அமைப்பாளராக, மற்றும் ஆசிரியராக, தம் வாழ் நாளில் பெரும் பகுதியைக் பல நாடுகளில் கழித்திருக்கிறார். பிருஹத்வனி என்றதொரு இசை ஆராய்ச்சி நிருவனத்தை சென்னையில் நிருவி, உலகப் புகழ்பெற்ற கலைஞர்களோடு இணந்து, ஆராய்ந்து, அவர்களுடைய இசை அனுபவங்களைப் பதித்து கடந்த 25 வருடங்களாக பல அரிய பொக்கிஷங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார்.

© 2017 by Karaikudi Subramanian. All rights reserved.

BRH logo without regd.png
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter
bottom of page