g;U`j;tdp Mrpupah;fs;
‘காமெட்’ முறைக்கல்வியில் அவர் அவர்க்கென்று ஓர் இடம். அதை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள். பரந்து விரிந்த இசை வெள்ளத்தில் நாம் ஒரு துளி. இந்தத் துளியைக் கண்டுகொண்டால், அதுவே போதும். அது போய்ச்சேரவேண்டிய இடத்தில் சேர்பதற்கான உத்திகளை அடிப்படையிலேயே அள்ளிக்கொடுப்பதுவே ‘காமெட்’ முறையின் வழி.
இதை நம்மிசையின் சுதந்திரம் என்றும் கூறலாம். இதனாலேயே ‘எல்லோருக்கும் இசை’ என்ற கொள்கை சாத்தியமாகிறது. பிருஹத்வனியில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் இந்த சேவைக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள் என்பதே உண்மை. இதில் ஏற்ற தாழ்வு கிடையாது. எல்ளோரும் இம்முறையில் நல்ல தேற்சி பெற்றிருந்தாலும் அவர் அவர்களுக்கென்று ஒரு இடத்தைத் தங்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக குருகுலவாசத்திற்கு இணயாகத் தன்னை இசைக்காகவே அர்ப்பணித்துக்கொண்டு, காரைக்குடி சுப்பிரமணியன் அவர்களிடம் பாட்டுப் பயின்று, ‘காமெட்’ முறையில் பயிற்சி பெற்று, பயனடைந்து, டிப்ளோமா பெற்று, அதனை உலகத்தில் பல பேர்கள் பயனடயுமாறு செய்து, அதனால் இம்முறைக்கு மேலும் மெருகுண்டாக்கி, இதற்கு அத்தாக்ஷியாகவும், பிருஹத்வனியின் ஆணி வேராக இருந்து இன்னும் சேவை செய்துகொண்டிருப்பவர்கள் இரண்டு நபர்கள். அவர்கள் திருமதி உஷா நரசிம்மன் அவர்களும் திருமதி சுதா ஹரிகிருஷ்ணன் அவர்களும் ஆவர். இவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசையில் எம்.ஏ பட்டதாரிகளும் கூட. இவர்கள் இப்பயிற்சி முறையைப் பற்றி “இனியவை இன்று’ என்ற ‘புது யுகம்’ TV வழங்கிய 500வது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்கள். (19:30 நிமிடங்களிலிருந்து)