top of page

tsu;r;rp

1993 லிருந்து Ford Foundation உதவியுடன் இம் முயற்சியை COMET என்ற பயிற்சி முறையை உண்டாக்கிச் செயல் படுத்த ஆரம்பித்தார். இதனால் பயனடைந்தவர்கள்: கர்னாடக இசை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், இசைக்கலஞர்கள், மேலை நாட்டு இசை மாணாக்கர்கள், கலைஞர்கள் ஆவர். சிறப்புப் பாடத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சென்னையிலும், திருச்சியிலும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு இம்முறையை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஏன், வில்வாரணி என்ற சிறு கிராமத்தில் கூட கிராமத்துக் குழந்தைகளுக்கு இப்பயிற்சி முறை சென்றடைந்திருக்கிறது.

 

இப்பயிற்சியின் சிறப்பை அறிந்தவர்கள் ஸ்ரீமதி கலாநிதி நாராயணன், சந்திரலேகா, ஸ்ரீஅடயார் லக்ஷ்மணன், சந்த்ரசேகரன், தனஞ்ஜயன்,  நரசிம்மாசாரி, ஸ்ரீமதி லீலா சாம்சன், உஷா ஸ்ரீநிவாசன் போன்ற தலை சிறந்த நாட்டியக் கலஞர்களும் நா. முத்துசாமி அவர்களின் கூத்துப்பட்டறை நாடகக் கலைஞர்களும் ஆவார்கள். இளம் நாட்டியக் கலைஞர்கள் இந்த முறையப் பயன்படுத்தி புதிய கோணங்களில் பட்டறைகள் நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடும் வகையில், நாட்டியத்தில் முன்னணியில் இருக்கும் சங்கீதா ஈச்வரனையும், பிரீதி ஆத்ரேயாவையும் குறிப்பிடலாம்.

 

இதன் பரந்த நோக்குக்கும் வெற்றிக்கும் உறு துணயாக 2003ல் India Foundation for Arts  பிருஹத்வனிக்கு பெருந்தொகையைக் கொடுத்து உதவியது. பின்னர் Government of India உதவியது. சென்னையிலும் திருச்சியிலும்  உள்ள 5000க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு இம்முறை பயனளித்திருக்கிறது.

© 2017 by Karaikudi Subramanian. All rights reserved.

BRH logo without regd.png
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter
bottom of page