fhiuf;Fb tPizg; guk;giu
இவ்வீணைப் பரம்பரை மலையப்பய்யரிடமிருந்து ஆரம்பித்தது என்றுமட்டும் தெரிகிறது. முதல் நான்கு தலைமுறைகளுக்கு விவரம் தெரியவில்லை.
5 வது தலைமுறை: சுப்பராயா (1810-?)
ஐந்தாவது தலைமுறையைச் சார்ந்த சுப்பராயா, முதலில் சிவகங்கை ராஜாவால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் புதுக்கோட்டை மஹாராஜா, ராமசந்திர தொண்டமானால் ஆதரிக்கப்பட்டார். இவருக்கு மஹாராஜா கனகாபிஷேகம் செய்து கௌரவித்தார். 1854ம் வருடம் மஹாவைத்தியனாத அய்யர் இந்த சமஸ்தானத்திற்கு வருகை தந்த போது, சுப்பராயரையும் விரிபோணி வர்ணத்தை இயற்றிய பச்சிமிரியம் ஆதியப்பய்யாவின் பேரனான சுப்புக்குட்டி அய்யாவையும் ஒரே சமயத்தில் பார்த்ததாகக் கூறப்படுகிறது. சுப்பராயா விரிபோணி வர்ணத்தை சுப்புக்குட்டி அய்யாவிடம் கற்றிருக்க வாய்ப்புண்டு. வர்ணங்களுக்கு சங்கதிகள் கிடையாது என்ற நிலை இருக்கும்போது, காரைக்குடி பாணியில் இந்த வர்ணத்துக்கு சில சிறப்பு சங்கதிகள் இருப்பது இதனால்தானோ என்று நினக்கத் தோன்றுகிறது!
6 வது தலைமுறை: சுப்பய்யா/சுப்பிரமணிய (1840-?)
ஆறாவது தலைமுறையைச் சார்ந்த சுப்பய்யா என்ற சுப்பிரமண்யன் திருகோகர்ணத்தில் பிறந்தார். இவர் தகப்பனாரைப்போலவே இவரையும் மஹாராஜா ராமசந்திர தொண்டைமான் ஆதரித்தார். இவருக்கும் கனகாபிஷேகம் செய்து கௌரவித்தார். இவர் பிருஹதாம்பாளை வீணை இசையினால் நிதம் ஆராதித்திருக்கிறார். இவரே புதுக்கோட்டை சமஸ்த்தானதினால் கடைசியாக ஆதரிக்கப்ப்ட்டவர்.
7 வது தலைமுறை: சுப்பராம (1875-1938)
1883ல் சுப்பராம அய்யர் சுப்பய்யாவிற்கும் சுப்பம்மாளுக்கும் திருகோகர்ணத்தில் பிறந்தார். தன்னுடைய 7 வது வயதில் தன் தகப்பனாரிடம் வீணை கற்கத் தொடங்கினார். சுப்பய்யாவய்யர் வீணயை “ஊர்த்வமாக” (நிறுத்திவைத்து வாசிக்கும்படியான நிலை) வாசித்ததாகத் தெரியவில்லை. ஆனால் சுப்பராம அய்யர் நிறுத்திவைத்த நிலையில் வீணையை வாசித்திருக்கிறார். இப்பழக்கம் எப்போது, எதனால் வந்தது என்று தெரியவில்லை. ஆந்திராவில் வெங்கடரமணதாஸ் வாசித்திருக்கிறார். ஸூபிக்கள் இவ்வாறு வாசித்திருக்கிறார்கள். இவ்வாறு வாசிக்கும் முறை கோயிலில் வாசிக்கும் வழியிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இவர் தம்பியான சாம்பசிவனோ இவ்வாறு வாசிக்கவில்லை. வீணை இப்போது வாசிப்பது போல் படுத்த நிலையில்தான் வாசித்தார். சுப்பராம அய்யருக்கு ஐந்து பெண்கள் உண்டு. பெரிய குடும்பமாதலால் பிழைப்பிற்காக திருகோகர்ணத்தை விட்டு காரைக்குடி சென்றார். அங்கே நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஆதரிக்கப்பட்டார். இக்காரணத்தினாலேயே, இவருக்கும் இவர் தம்பியான சாம்பசிவ அய்யருக்கும் “காரைக்குடி வீணை சகோதரர்கள்” என்று பெயர் வந்தது.
7 வது தலைமுறை: சாம்பசிவா (1888-1958)
1883ல் சுப்பராம அய்யர் சுப்பய்யாவிற்கும் சுப்பம்மாளுக்கும் திருகோகர்ணத்தில் பிறந்தார். தன்னுடைய 7 வது வயதில் தன் தகப்பனாரிடம் வீணை கற்கத் தொடங்கினார். சுப்பய்யாவய்யர் வீணயை “ஊர்த்வமாக” (நிறுத்திவைத்து வாசிக்கும்படியான நிலை) வாசித்ததாகத் தெரியவில்லை. ஆனால் சுப்பராம அய்யர் நிறுத்திவைத்த நிலையில் வீணையை வாசித்திருக்கிறார். இப்பழக்கம் எப்போது, எதனால் வந்தது என்று தெரியவில்லை. ஆந்திராவில் வெங்கடரமணதாஸ் வாசித்திருக்கிறார். ஸூபிக்கள் இவ்வாறு வாசித்திருக்கிறார்கள். இவ்வாறு வாசிக்கும் முறை கோயிலில் வாசிக்கும் வழியிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் இவர் தம்பியான சாம்பசிவனோ இவ்வாறு வாசிக்கவில்லை. வீணை இப்போது வாசிப்பது போல் படுத்த நிலையில்தான் வாசித்தார். சுப்பராம அய்யருக்கு ஐந்து பெண்கள் உண்டு. பெரிய குடும்பமாதலால் பிழைப்பிற்காக திருகோகர்ணத்தை விட்டு காரைக்குடி சென்றார்.
அங்கே நாட்டுக்கோட்டைச் செட்டியார்களால் ஆதரிக்கப்பட்டார். இக்காரணத்தினாலேயே, இவருக்கும் இவர் தம்பியான சாம்பசிவ அய்யருக்கும் “காரைக்குடி வீணை சகோதரர்கள்” என்று பெயர் வந்தது.
இவர்களுக்கு அதிகமாக புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திதான் மிருதங்கம் வாசித்திருக்கிறார். தக்ஷிணாமுர்த்தி அவர்களின் மறைவுக்குப் பிறகு ஒரு சில வருடங்கள் வீணை வாசிக்காமல் இருந்தார். பின்னர் இவர் மைத்துனர் காரைக்குடி முத்து அய்யர் கச்சேரிகளுக்கு வாசித்தார். 1950ல் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சேதுராமன் அவர்கள் முயற்சியால் பெரம்பூர் சங்கீத சபாவிற்குப் பெருமை சேர்த்தார்.
காரைக்குடியில் தன் குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட படம் இது. இதில் காண்பவர் வீணை சகோதரர்களின் மனைவிகளும், சுப்பராம அய்யரின் குழந்தைகளூம். சுப்பராமய்யருக்கு இறந்த குழந்தைகளைத் தவிர்த்து இருந்த குழந்தைகள் ஐந்து பெண்கள். மூத்த பெண் இதில் இல்லை. இரண்டாவது பெண் (சுந்தராம்பாள்) பின் வரிசையில் வலது பக்கம் கடைசியில் குழந்தையோடு நிற்கிறார். நடுவில் சுப்பராமய்யரின் மனவி. இடது கடைசியில் சாம்பசிவய்யரின் மனைவி. உட்கார்ந்திருப்பவர்களில் இடது கடைசியில் சுப்பராம அய்யரின் நான்காவது பெண் (சங்கரி). மடியில் குழந்தையோடு உட்கார்ந்திருப்பவர் சாம்பசிவ அய்யர். அவருக்கு அடுத்தது சுப்பராம அய்யர். அவருக்கு அடுத்து, அவருடைய கடைசிப்பெண் மீனாக்ஷி (இப்போது இவருக்கு 93 வயது. வீணை வாசிக்கிறார். சொல்லியும் கொடுக்கிறார்) இவருக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர், சுப்பராமய்யரின் மூன்றாவது பெண் லக்ஷ்மி. காரைக்குடி சுப்பிரமணியன், ராஜேஸ்வரி பத்மனாபனின் தாயார்
1952ல் ருக்மிணி அருண்டேல் அவர்களின் அழைப்பிற்கிணங்கி கலாக்ஷேத்திராவில் முதல்வராகப் பதவி ஏற்றார். அதே வருடத்தில் முதன் முதலில் இந்திய அரசு நான்கு இசைக் கலைஞர்களுக்கு, இரண்டு பாடகர்களுக்கும், இரண்டு தந்தி வாத்தியக் கலைஞர்களுக்கும் ‘President Award’ கொடுத்து கௌரவித்தது. அவர்கள், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், காரைக்குடி சாம்பசிவ அய்யர், முஸ்தாக் ஹுசேன்கான்,, அல்லாவுதீன்கான் அவர்கள். அதே வருடம் சென்னை ம்யூசிக் அகாடெமி சங்கீத கலாநிதிப் பட்டம் கொடுத்து கௌரவித்தது. சங்கீத கலாநிதி தேவகோட்டை நாராயண அய்யங்கார் இவரிடம் சில வருடங்கள் வீணை கற்றிருக்கிறார். கலாக்ஷேத்திராவில் (அப்போது Theosophical Society-ல் இருந்தது) இவருக்கு ஒரு தனி வீடு கொடுத்து இருக்க வைத்திரந்தார்கள். அங்கேயே மாணவிகள் கற்க வந்தார்கள். அன்றைய நிலையில் பலர் ஸ்ரீலங்காவிலிருந்து வந்து கற்றார்கள். (இப்படத்தில் இருப்பவர்களும் ஸ்ரீலங்காவிலிருந்தே)
சங்கீதம் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கே என்று உணர்ந்தவர் சாம்பசிவ அய்யர் அவர்கள். வெள்ளிக்கிழமை தோறும் தன் மனைவி சுகுந்தகுந்தலாமபாளுடன் தன் வீட்டில் ஸ்வாமி சன்னிதியில் சங்கீததித்தினால் பூஜை செய்வார். மத்தியானம் சாப்பிட்டவுடன் படுத்துக்கொண்டே வீண வாசிப்பார். அப்போது ஒரு நாள் எம்.எஸ் சுப்புல்க்ஷ்மி அவர்கள் வந்து நின்று கேட்டிருக்கிறார். அய்யர் அவர்கள் வாசிப்பை எம்.எஸ்.எஸ் உயர்த்திக்கூற அதற்கு சாம்பசிவய்யர் கூறிய பதில் மிக அழகானது: “நான் வீணையைக் கையில்தான் வைத்திருக்கிறேன். நீயோ வீணயை உன் குரலிலேயே வைத்திருக்கிறாயேம்மா!” என்று வெகு உயர்வாகக் கூறியிருக்கிறார். (நம் பெருமைக்குரிய, அமரராகிய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் எம்.எஸ்.எஸ் அவர்கள் இறந்தபோது அஞசலி செலுத்த சென்னை வந்திருந்தார். அப்போது இதை நினைவு கூர்ந்து கூறி எம்.எஸ்.எஸ் அவர்களைப் பெருமைப்படுத்தினார்).
சாம்பசிவய்யர் அவர்களின் முதல் சிஷ்யை ரங்கநாயகி ராஜகோபாலன் அவர்கள். பின்னர், தன் அண்ணனின் மூன்றாவது மகள் வழிப் பேத்தி ராஜேஸ்வரி பத்மனாபன் இவரிடம் கற்க வந்தார். அதன் பின்னர், மைசூரிலிருந்து ராமஸ்வாமி சாஸ்த்ரி அவர்கள் கற்க வந்தார்கள். தன்க்குக் குழந்தை இல்லாத காரணத்தால் தன் வீணப் பரம்பரையை பிள்ளை வழி விருத்தி செய்ய ராஜேச்வரி பத்மனாபனின் தம்பியான காரைக்குடி சுப்பிரமணியனை 1957 ம் ஆண்டு தத்து எடுத்துக்கொண்டார். சங்கீதத்தின் அடிப்படையை ஆணித்தரமாகச் சொல்லிக்கொடுத்து, அதன் முக்கியத்வத்தை உள்ளிருத்தும் வகையில் பயிற்சிகள் கொடுத்தார். வகையில் மைலாப்பூர் கபாலி கோயிலில் தன் கச்சேரிக்குப் பிறகு ‘துர்கா ஸூக்தம்’ (யஜுர் வேத மந்திரம்) வாசிக்க வைத்தார். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புற்று நோய் காரணமாக் உயிர் நீத்தார். ஆல் இண்டியா ரேடியோ டெல்லி அவர் மந்தாரி ராகத்தில் வாசித்த ‘நின்னு செப்ப காரணமேமி’ என்ற பட்டணம் சுப்பிரமணிய்யரின் க்ருதியை ஒலி பரப்பி நினைவாஞ்சலி செலுத்தியது.
8 வது தலைமுறை: லக்ஷ்மி அம்மாள் (1918-1985)
எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த வீணை லக்ஷ்மி அம்மாள் சுப்பராம ஐயரின் மூன்றாவது மகள். டி.கே நாராயணய்யரின் மனைவி. மதுரையில் வசித்து வந்தார். இவர் குழந்தைகளில் வீணையைத் தன் தொழிலாகக் கொண்டவர், ராஜேஸ்வரி பத்மனாபனும் (பல சிறந்த விருதுகள் பெற்றாவர்), காரைக்குடி சுப்பிரமணியனும் ஆவர். பரம்பரை சங்கீதம் வளர, மகன் சுப்பிரமணியனை (சந்தானம்) தன் சிறிய தகப்பனாரான சாம்பசிவய்யருக்கு 1957ல் ஸ்வீகாரம் கொடுத்தார். இவர் வீணை இசை திருச்சி ரேடியோவில் பல வருடங்கள் ஒலி பரப்பப்பட்டிருக்கிறது. வாழ்னாள் முழுதும் பலருக்கு வீணை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். இவருடைய மூத்த மகன், வெங்கடராமனின் புதல்வி டாக்டர் சாந்தி மகேஷ் ஒர் வீணை இசைக்கலைஞர். சென்னை Queen Mary’s College-ல் வீணையில் துணை இசைப்பேராசிரியராய் இருக்கிறார். கச்சேரிகள் செய்கிறார். இவருடைய மூத்த மகள் ராஜேஸ்வரி பத்மனாபனின் புதல்வி ஸ்ரீவித்யா சந்த்ர மௌலி மற்றொரு வீணை இசைக்கலஞர். Portland, Oreganல் ‘த்வனி’ என்ற அமைப்பை உருவாக்கி வீணையைப் பலருக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார். இவருடைய கணவர், சந்திர மௌலி, லக்ஷ்மி அம்மாளின் கடைசிப் புதல்வனும் தன் மனைவியோடு சேர்ந்து வீணை கற்பிக்கிறார்.
9வது தலைமுறை: ராஜேஸ்வரி பத்மனாபன் (1939 - 2008)
இவர் காரைக்குடி சுப்பராம அய்யரின் மூன்றாவது பெண் லக்ஷ்மியின் முதல் பெண். சிறு வயதியிலேயே இயற்கையாகவே வீணையில் மிகுந்த ஆர்வம் காட்டி சிறப்பாக வாசிக்கத் தொடங்கியவர். தன்னுடைய 4வது வயதில் தன் சின்னத்தாத்தாவுடன் திருவனந்தபுரம் மஹாராணியிடம் சென்று ‘இரண்டு கைத் தாளம்’ போட்டு பரிசு பெற்றவர். லக்ஷ்மி அம்மாள் இவரைத் தன் சிறிய தகப்பனார், சாம்பசிவய்யரிடம் வீணையை குருகுல வழியில் பயில அனுப்பி வைத்தார். தன் குருவொடும் குருவின் மற்றொரு பிரத்தியேக சிஷ்யை ரங்கனாயகி ராஜகோபாலனோடும் சேர்ந்து கச்சேரிகள் செய்திருக்கிறார்.
1958ல் சாம்பசிவய்யர் கலாக்ஷேத்திரத்தில் முதல்வராக இருக்கும்போது காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு, தன் தம்பியும் சாம்பசிவ அய்யரின் ஸ்வீகார புத்திரனுமான காரைக்குடி சுப்பிரமணியனுக்கு இவர் வீணையைத் தொடர்ந்து சொல்லிக்கொடுத்தும் சேர்ந்து கச்சேரிகள் செய்தும் ஊக்குவித்தார்.
1958ம் வருடம் மைசூர் வாசுதேவாசாரியாரிடம் பாட்டுக் கற்க இந்திய சங்கீத நாடக அகாடெமியின் உதவித்தொகை கிடைத்தது. வீணைப் பரம்பரையில் இருந்த ஒருவருக்கு ஒரு சிறந்த வாக்கேயகாரரிடம் நேரடியாகப் பாட்டுக்கற்கக் கிடைத்தது ஓர் அரிய சந்தர்ப்பம். அப்போது கலாக்ஷேத்திராவில் வீண ஆசிரியராகவும் ஆனார். பல வருடங்கள் அங்கேயே தொடர்ந்து வேலை செய்தார். பின்னர் முதல்வராகி ஓய்வு பெற்றார்.
இந்தியாவில் இவரிடம் வீணை கற்றுக்கொண்டவர் பலர். வெளி நாட்டிலிருந்தும் நிறைய மாணாக்கர்கள் இவரிடம் வீணை கற்றுக்கொண்டிருக்கிறார். அவர்களில் குறிப்பிடத்தக்க வகையில் இதாலியைச் சேர்ந்த டாக்டர் பியா ஸ்ரீநிவாசன் அவர்கள் இவருடைய சங்கீதத்தில் பெரு மதிப்பும் இவரிடம் மிக்க அன்பும் வைத்திருந்தார். காரைக்குடி வீணைப் பரம்பரையின் ஆழத்தையும், அழுத்தத்தையும், அழகினையும், அமைதியையும் கண்டு வியந்தவர். ஜெர்மெனியில், பெர்லின் நகரத்தில் இருக்கும் Museum Für Völkerkunde என்ற மியூசியத்தில் காரைக்குடி வீணைப் பாணியைப் பதிவு செய்ய எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து வெற்றிகரமாக Music Für Vina என்ற இரண்டு ஆல்பம் கொண்ட ஒரு ரெகார்டிங் கொண்டுவரக் காரணமாக இருந்தவர். ராஜேச்வரி பத்மனாபனும் அவர் தம்பி காரைக்குடி சுப்பிரமணியனும் இரட்டை வீணகளாக வாசிக்க, தஞ்சாவூர் உபேந்திரன் அதற்கு மிருதங்கம் வாசித்திருக்கிறார். பியா ஸ்ரீநிவாசன் அதற்கு விளக்கவுரை எழுதி இருக்கிறார். பெர்லின் மியூசியம் அதனை 1975ம் ரிகார்ட் செய்து டாக்டர் ஆர்துர் சைமன் மேற்பார்வையில் வெளிட்டது. 1980ம் வருடம் இது ஒரு தலை சிறந்த ரிகார்டிங் என்று இதற்காக நியமித்த குழு முடிவெடுத்து, Schalplatten Kritik Award என்ற பெருமைமிக்க பரிசு கிடைத்தது. பல நாடுகளுக்குச் சென்று நிறையக் கச்சேரிகள் செய்திருக்கிறார், ரெகார்டிங் கொடுத்திருக்கிறார்.
ராஜேஸ்வரி பத்மனாபன், தமிழக அரசிடமிருந்து, கலைமாமணி பட்டமும், சங்கீத நாடக அகாடமி பட்டம் மற்றும் பல பட்டங்கள் வாங்கியிருக்கிறார். சில வர்ணங்கள், தில்லானாக்களும் இயற்றியிருக்கிறார். நாட்டிய நாடகத்திற்காக, கும்பேஸ்வரர் குறவஞ்சிக்கு மெட்டும் அமைத்திருக்கிறார். சங்கீத நாடக அகாடமியில் சிறப்பு அங்கத்தினராகவும் பணி புரிந்திருக்கிறார். வீணை மேளத்தில், தன் கணவர் பத்மனாபனுடன் இணந்து ‘அக்ரிலிக்’ லில் மேளம் செய்து சோதனை செய்திருக்கிறார்.
இவரின் இசைப் பாணி, பரம்பரையை ஒட்டிப் பாட்டோடு கலந்த ஒன்று ஆகும். அது மைசூர் வாசுதேவாசார் அவர்களிடம் பாட்டுக் கற்க நேர்ந்த பாக்கியத்தால் இன்னும் மேலும் மெருகேறியது எனலாம். இவருடைய மகள், 10 வது தலைமுறையான ஸ்ரீவித்யாவிற்கும் வீணை சொல்லிக்கொடுத்து ஓர் சிறந்த வீணை வித்துவானாகியிருக்கிறார். அவர் அமெரிக்காவில் Portland, Oreganல் தன் தாயாரின் வீணை இசையையை ‘த்வனி’ என்ற அமைப்பின்மூலம் தன் கணவரும், தன் மாமாவுமான சந்திரமௌலி அவர்களோடு சேர்ந்து பரப்பிவருகிறார் இன்று.
9 வது தலைமுறை: காரைக்குடி சுப்பிரமணியன்
காரைக்குடி சுப்பிரமணியன் 1944ம் வருடம், அக்டோபர் மாதம் 23ம் தேதி மதுரையில் லக்ஷ்மி அம்மாளுக்கும், டி.கே நாராயண அய்யருக்கும் பிறந்தார். இவருக்கு சாம்பசிவன் என்று தன் சிறு தந்தையின் பெயரையே வைத்தார் தாயார் (பின்னால் தன் சிறு தந்தைக்கே இவரை ஸ்வீகாரம் கொடுக்கப் போகிறோம் என்று அப்போது இவருக்குத் தெரியாது!). வீட்டில் இவரை சந்தானம் என்று கூப்பிட்டார்கள். வீட்டில் சங்கீத சூழ்நிலை காரணமாக சிறு வயதிலிருந்தே வீணை வாசிக்க ஆரம்பித்தார். தாயாரிடம் முறையாகவும் கற்க ஆரம்பித்தார். தன் 13வது வயதில் சாம்பசிவய்யருக்கு ஸ்வீகாரம் கொடுத்தபோது இவருக்கு சுப்பிரமணியன் என்று பெயர் மாற்றினார்கள். சங்கீத டிப்ளோமா படிப்போடு Metriculationனிலும் சேர்ந்திருந்தார்.
அந்த கலைச்சூழலில் சாம்பசிவய்யரிடம் முறையாக வீணை கற்றார். நிதம் 8 லிருந்து 10 மணி நேரம் வரை வீணை சாதகம் செய்ய வைப்பார் சாம்பசிவய்யர். ஆதலால் Metriculationக்கு சரிவரப் படிக்க முடியவில்லை. ஒரு வருடம் பின் தங்கினார். 1958ல் சாம்பசிவய்யர் காலமான பின்னர் தன் சகோதரி ராஜேஸ்வரி பத்மனாபனிடம் தன் வீணயைத் தொடர்ந்து படித்துக்கொண்டே கலாக்ஷேத்திரத்தில் Metriculationயும் படித்துத் தேர்ந்தார். தன் சகோதரியோடு கச்சேரிகளில் சேர்ந்து வாசித்தார். ரங்கநாயகி ராஜகோபாலனிடமும் கற்றுக் கொண்டு அவரோடும் சேர்ந்து கச்சேரிகளில் வாசித்தார். தன் சகோதரியோடு மைசூர் வாசுதேவாசாரிடம் சென்று அவர் பாடக் கேட்டு பின்னர் B.Sc (Chemistry), M.A (English) படித்துத்தேர்ந்தார். மதுரையில் மதுரைக்கல்லூரியில் ஒரு வருடமும், சென்னையில் விவேகானந்தர் கல்லூரியில் ஐந்து வருடங்களும் ஆங்கில விரிவுரையாளராக வேலை பார்த்தார். 1975ல் அமெரிக்கா சென்று வெஸ்லெயன் யூனிவர்ஸிடியில் உலக இசைபற்றி நான்கு வருடங்கள் படித்தார். முக்கியமாகப் பியானோ, ஜப்பானீஸ் கோடோ, இந்தோநேசியன் காமலான், அமெரிக்கன் இந்தியன் நாவஹோ, ஆப்பிரிக்கன் மத்தளங்கள் போன்ற உலக இசைகளைப் பயின்றார். பின்னர், “இந்திய இசைப்பாரம்பர்யங்களில் வீணையும் அதில் தனக்கென்ற பாணியும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கினார். அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பின்லாந்த், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கல்லூரிகளில் கர்னாடக இசை படிப்பித்திருக்கிறார். இவர் இசை நாடாக்களுக்கு அவார்ட்கள் கிடைத்திருக்கின்றன.
சென்னை ஆல் இந்தியா ரேடியோ முதல் கிரேடில் 40 வருடங்களுக்கு மேல் இவர் வீணை இசையை ஒலி பரப்பியிருக்கிறது. பல நாடுகளில் பெரிய இசை மேடைகளில் வீணை வாசித்திருக்கிறார், பல பெருங்கலைஞர்களுடனும் வாசித்திருக்கிறார். இசைப்புத்ததகங்கள் வடித்திருக்கிறார். ஆராய்ச்சி இசைக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உலக அளவில் செமினார்களில் பங்கு எடுத்திருக்கிறார். சென்னை யூனிவர்ஸிடியில் 15 வருடங்கள் இசைப்பேராசிரியராகப் பணியாற்றிருக்கிறார்.
இவர் செய்த மிகச் சிறந்த பணி 1989ல் ‘பிருஹத்வனி’ (‘பிரபஞ்ச ஒலி’) என்ற உலக இசையாராய்ச்சி மையத்தை சென்னையில் நிறுவியது ஆகும். இதன் மூலம் தன் உலக இசையாராய்ச்சிகளோடு மிகப் பெரும் கலைஞர்களிடம் தொடர்பு கொண்டு அவர்கள் இசைக்கு அளித்த விஷயங்களையும் சேமித்து எல்லோருக்கும் கர்னாடக இசையின் நுணுக்கங்கள் உலக அளவில் எளிதாகக் கிடைக்கும் வண்ணம் ‘காமெட்’ என்ற புது வழியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். குழந்தைகளிலிருந்து, கிராமத்து ஜனங்களிடமிருந்து, இசையில் சிறந்து விளங்கும் எல்லாவிதக் கலைஞர்களும் பயன்படும் வகையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி மையம் செயல் பட்டிருக்கிறது.