gapw;rp Kiw
‘காமெட்’ இசைப் பயிற்சி முறை என்றால்?
COMET என்பது Correlated Objective Music Education and Training என்பதின் சுருக்கம். இதற்கு “ஒன்றை ஒன்று இணைக்கும் நடு நிலைப்பட்ட இசைக்கல்வி மற்றும் பயிற்சி முறை” என்று விளக்கம் கூறலாம். ‘ஒன்றை ஒன்று’ என்றால் ஒவ்வொரு கலைக்கும், ஒவ்வொரு பாணிக்கும், படிப்பிற்கும், விளையாட்டிற்கும், மொழிகளுக்கும், மற்றும் வாழ்க்கைக்கே தொடர்புகளைக்காட்டும் இசைப்பயிற்சி என்று கூறலாம். Objective என்ற சொல், விஞ்ஞான ரீதியான என்ற பொருளிலும் கொள்ளலாம்.
இவ்விசைப்பயிற்சி முறையை ‘அடிப்படைக்கும் அடிப்படை’ என்று விளக்குவதும் உண்டு. இசையை கற்றுக்கொடுக்கும்போது பழமையான வழிமுறைகளுக்கு மதிப்புக்கொடுத்தும் அதே சமயத்தில் புதிய வழியில் பழமையை அணுகும் உத்திகளுக்கு இடம் கொடுத்தும் உருவாக்கிய இசைக்கல்வி முறை இது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் சுமார் 15 வருடங்களில் சிறப்பாக இசை கற்கும் விடயங்களை 5 லிருந்து 7 வருடங்களில் கற்க வாய்ப்புண்டு இந்த வழியில். நேரத்தை வீணடிக்காமல் சரியான வகையில் இசை நுணுக்கங்களை அறிய இம்முறை வாய்ப்பளிக்கிறது. விஞ்ஞான வழியில் உண்டான இம்முறையால், தானே பாட்டுக்கள் எந்த பாணியிலும் கற்றுக்கொள்ளவும் இயற்றுவதற்கும் திறமை உண்டாகும். இசையையும் ஆத்மிகத்தையும் இணைக்க முற்பட்டால் அது அவர் அவர்கள் இயல்பைப் பொருத்தது, நம்பிக்கையைப் பொருத்தது. ஒவ்வொரு நாட்டு இசையும் அன்னாட்டு மொழி, கலாசாரத்தை ஒட்டி வளர்ந்ததுதான். ஆனால் அதன் அடிப்படை, ஆதாரம் எல்லோருக்கும் சொந்தம் என்ற தத்துவத்தில் வளர்ந்ததொரு இசைப்பயிற்சி முறை COMET. இதன் காரணத்தாலேதான், மேலை நாட்டுக்கலைஞர்களும் இதைக் கற்றுக் கொள்ள வருகிறார்கள்.