top of page

vjw;F ,g;gapw;rp?

நம் பாரம்பர்ய இசை, இலக்கண மரபுகொண்டதொரு கலாசார இசை. ஒரு சில சாரர்களிடம் மட்டுமே அபரிமிதமாக தங்கி நிற்கின்றது. இதற்கு ஒரு சில காரணங்கள்:

 

1. பரம்பரை.

 

2. சூழ் நிலை.

 

3. குருகுலமாகக் கற்றுக்கொண்டதொரு வழிமுறை.

 

4. பாகுபடுத்திப் பிரித்துப் பின்னர் சேர்த்துச் சொல்லிக்கொடுக்ககூடிய திறமைகளை வளர்க்கும் விஞான ரீதியான வழிமுறைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு பயிற்சி முழுமையாக உருவாகாத நிலை.

 

5. நன்கு பாட, வாசிக்க வந்தவர்கள் அந்தத்திறமையை மேலும் மேலும் வளர்க்க முயற்சி செய்து தன்னைக் கச்சேரி செய்வதற்கு தயார்ப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர பொறுமையாக எல்லோருக்கும் சொல்லிக்கொடுக்க முடியாத சூழ் நிலை, மன நிலை. அப்படியே சொல்லிக் கொடுத்தாலும் சுலபமாக சொல்லிக்கொடுக்கும் நிலையில் உள்ள மாணாக்கர்களுக்குத்தான் அது போய்ச் சேரும் வாய்ப்பு.

 

6. கல்லூரிகளும், யூனிவர்சிடிகளும், பாடத்திட்டம், பரீக்ஷை, மற்ற பாடத்திட்டங்களுக்கு  இணயாக, பட்டறை, செமினார், தீசிஸ், போன்ற பலவகையான வேலைகளுக்கு தன்னைக்கட்டாயத்துக்குட்படுத்த வேண்டியிருப்பதினாலும், முழுமையாக பாடவோ, வாசிக்கவோ, பயிற்சி செய்யவோ முடியாமல் நேரத்தை பல வழிகளில் செலவிட வேண்டியிருப்பதாலும்தான். இவ்வளவையும் தாண்டிக் கற்றுக்கொண்டவர்கள் வெகு சிலரே. இதையும் தாண்டி நன்கு,    பாடத்தெரிந்து வாசிக்கத்தெரிந்து சொல்லிக்கொடுப்பவர்கள் மிகச் சிலரேயாவர். இக்காலத்தை ஒட்டித் திறமையாகவும், விஞ்ஞான ரீதியாகவும், technologyஐ நன்கு உபயோகப்படுத்தியும் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க ஒரு செயல் முறைத்திட்டத்தை உருவாக்கத்துணிந்தார், டாக்டர் காரைக்குடி சுப்பிரமணியன் அவர்கள்.

bottom of page